உலகம்

ராணிக்கும், மன்னருக்கும் டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் தேவையில்லை

செய்திப்பிரிவு

இங்கிலாந்து ராணி மற்றும் மன்னருக்கு சில தனிப்பட்ட சலுகைகள் உள்ளன. இவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் உலக நாடுகளுக்கு செல்லலாம். இங்கிலாந்தில் இவர்கள் வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளதால், இவருக்கும் இனி உலக நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை.

மேலும் இங்கிலாந்து மன்னராகவோ, ராணியாகவோ இருப்பவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியின் நீர் நிலைகளில் உள்ள அன்னப் பறவைகள் அனைத்தும் சொந்தமானவையாக கருதப்படுகின்றன.

ராயல் வாரன்ட்: இங்கிலாந்து அரண்மனைக்கு தேவையான பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸால் ராயல் வாரன்ட் வழங்கப்படும். இதன் மூலம் சரக்குகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT