2016-ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு அறிவிக்கபட்டுள்ளது.
குடிமக்கள், அரசுகள், வர்த்தகங்கள், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் முன்னிலை நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனம் மற்றும் கார் முதலாளிகள் என்று ஒப்பந்த உறவுகளை, அதாவது வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக இவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களில் பொதுகாக எதிரெதிர் இரட்டை நலன்கள் இருப்பது வழக்கம் எனவே ஒப்பந்தங்களை வடிவமைப்பதில் இருதரப்பினரும் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் விதமான ஒப்பந்தங்களை வடிவமைக்க வேண்டும்.
இந்த நோபல் பொருளாதார அறிஞர்கள் ‘ஒப்பந்தக் கோட்பாடு’ ஒன்றை உருவாக்கினர். ஒப்பந்த வடிவமைப்பில் உள்ள பல்வேறு சட்டகங்கள், சிக்கல்கள், ஆகியவற்றை ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தின் கீழ் வடிவமைப்பின் கீழ் கொண்டு வர இவர்களது ஆய்வு உதவி புரிகிறது.
உதாரணமாக முதன்மை செயலதிகாரிகளின் வேலைத்திறமைக்கேற்ப சம்பளம் நிர்ணயம் செய்வது, பொதுத்துறை நடவடிக்கைகளை தனியார்மயப்படுத்துவது குறித்த ஒப்பந்த வடிவமைப்புகள் என்று இவர்கள் ஆய்வு ஒருங்கிணைந்த ஒப்பந்தம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியதற்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய ஒப்பந்தங்கள் பலவும் இவரது ஒப்பந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றால் மிகையாகாது, அரசியல் சட்ட வடிவமைப்புகள் முதல் திவால் சட்டங்கள் வரை அனைத்துக் கொள்கை வடிவமைப்புகளுக்கும் இவர்களது கோட்பாடுதான் ஒரு அறிவார்த்த சட்டகத்தையும் அடித்தளத்தையும் வழங்குகிறது.