உலகம்

இந்திய துல்லிய தாக்குதலுக்கு ரஷ்யா வரவேற்பு

பிடிஐ

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடத்திய துல்லிய திடீர் தாக்குதலை வரவேற்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸ்சாண்டர் எஸ்.கடாகின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா எப்போதும் ஆதரவாக இருக்கும்.

தீவிரவாத செயல்கள் என்பவை மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி நாட்டின் குடிமக்களின் அமைதியை சிதைக்கும் வலிமை மிக்கவை. ஆகவே ஒவ்வொரு நட்டுக்கும் தங்கள் தற்காப்பை உறுதி செய்து கொள்ள உரிமை உண்டு.

ரஷ்யா - பாகிஸ்தான் ராணுவ படைகள் இணைந்து நடத்தும் ராணுவம் பயிற்சிகள் குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தீவிரவாத செயல்களுக்கு எதிரான தீர்க்கமான போராட்டத்தை ரஷ்யா கொண்டுள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT