கஞ்சாவுக்கு விதிக்கப்பட்டிருக் கும் கட்டுப்பாடு களை தளர்த்த ஜமைக்கா அரசு முடிவு செய்துள்ளது. ஜமைக்காவில் குறிப்பிட்ட மதத்தினர் கஞ்சாவை புனிதப் பொருளாகக் கருதுகின்றனர். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை களை நீக்கக் கோரி அவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜமைக்கா அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நீதித் துறை அமைச்சர் மார்க் கோல்டிங் நிருபர்களிடம் கூறியதாவது:
தனிநபர் 57 கிராம் அளவுக்கு கஞ்சா வைத்திருப்பதை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் மதரீதியான பயன்பாடு, அறிவியல் ஆய்வு மற்றும் மருத்துவத்தில் கஞ்சாவை பயன்படுத்த சட்டபூர்வமாக அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.