உலகம்

கோடீஸ்வர மகனை பார்க்க சென்றாலும் கார் கேரேஜில்தான் தூக்கம்: எலான் மஸ்க் தாய் தகவல்

செய்திப்பிரிவு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸில் மகன் வீட்டுக்கு சென்றால் கார் நிறுத்துமிடமான கேரேஜில்தான் தூங்குவேன் என்று உலக கோடீஸ்வரர் எலான் மஸ்கின் தாய் மயி மஸ்க் (74) தெரிவித்துள்ளார்.

"தி சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக எனது மகன் (எலான் மஸ்க்) இருந்தாலும் அதில் அவனுக்கு பெரிய நாட்டமில்லை. உண்மையை சொன்னால் டெக்சாஸில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் குடியிருப்புக்கு சென்றால் கூட நான் கார் நிறுத்தும் கேரேஜ் இடத்தில்தான் தூங்குவது வழக்கம். ராக்கெட் விடும் இடத்தில் சொகுசான வீட்டை எதிர்பார்க்க முடியாது.

எலானைப் போல் செவ்வாய்கிரகத்துக்கு செல்வதில் எல்லாம் எனக்கு விருப்பம் கிடையாது. ஆனால் எனது பிள்ளைகள் விரும்பினால் அதை செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உலக கோடீஸ்வரனாக இருந்தும் கூட தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது, நண்பர்களுடன்தான் தங்கியிருப்பதாக எலான் மஸ்க் நடப்பாண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 2020-இல் அனைத்து சொத்துகளையும் விற்க விரும்புவதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT