உலகம்

பாகிஸ்தானில் ரயில் தடத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி; 12 பேர் காயம்

பிடிஐ

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயில் தடத்தில் வைக்கப்பட்ட இரண்டு குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.

முதல் குண்டுவெடிப்பு ராவல்பிண்டி ஜாபர் எஸ்பிரஸ் செல்லும் வழியில் ஏற்பட்டது. 20 நிமிட இடைவேளையில் இரண்டாவது குண்டும் வெடித்தது.

இந்தக் குண்டு வெடிப்புக் குறித்து போலீஸ் கூறும்போது, "குற்றவாளிகள் நன்கு திட்டமிட்டு இந்தச் சதி செயலை செய்துள்ளனர். குண்டு வைக்கப்பட்டு இருபது நிமிடங்களில் வெடித்துள்ளது. இதில் நான்கு பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்" என்றார்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

எனினும் பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸரால் சந்தேகிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT