உலகம்

அமெரிக்கா, தென்கொரியா போர் ஒத்திகை

செய்திப்பிரிவு

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து அடுத்த மாதம் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன.

வடகொரியா அடுத்தடுத்து அணுஆயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என்றும் அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே வடகொரி யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள் ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அடுத்த மாதம் போர் ஒத்திகை நடத்த திட்டமிட்டுள்ளன.

சிவப்பு கொடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையில் இருநாட்டு விமானப் படைகளும் பங்கேற்க உள்ளன. வடகொரியாவின் அணு சக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும் வகையில் போர் ஒத்திகை நடத்தப்படும் என்று தென் கொரிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT