உலகம்

மலேசியாவில் மேலும் ஒரு படகு கவிழ்ந்து 9 பேர் மாயம்

செய்திப்பிரிவு

மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு படகு வியாழக்கிழமை அதிகாலை கவிழ்ந்ததில் 9 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை நோக்கி மலக்கா ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த அந்த படகு, மலேசியாவின் செபாங் மாவட்டத்துக்கு அருகே உள்ள கடற்கரையை ஒட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 18 பேரை உயிருடன் மீட்டதாகவும் மேலும் காணாமல் போன 9 பேரை தேடி வருவதாகவும் மலேசிய கடற்படை உயர் அதிகாரி முகமது ஹம்பாலி யாகூப் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சற்று தொலைவில் புதன்கிழமை ஒரு படகு விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 97 பேரில் 62 பேர் உயிருடனும் 9 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 26 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT