உக்ரைனில் கிளச்சியாளர்கள் வசமுள்ள மரியூபோல் நகரை, அரசுப் படைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டு தாக்கு தல் நடத்தின. இதில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான உக்ரைன் தலைவர்களுக்கு எதிரான இந்த கிளர்ச்சியை தொடர்ந்து உக்ரைனில் கிழக்கு மற்றும் தென்கிழக் கில் உள்ள பல்வேறு நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட் டுக்குள் வந்தன. இந்தப் பகுதிகள் உக்ரைனில் இருந்த விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்த கிளர்ச்சியாளர்கள், தங்கள் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கிளச்சியாளர்கள் வசமுள்ள தென்கிழக்கு துறைமுக நகரான மரியூபோலை, உக்ரைன் அரசுப் படைகள், வெள்ளிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டன.
இதுகுறித்து உக்ரைன் உள்துறை அமைச்சர் அர்சென் அவகோவ் கூறுகையில், “பயங்கர வாதிகளுக்கு எதிரான எங்கள் நடவடிக்கை அதிகாலை 4.50 மணிக்கு தொடங்கியது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது.
பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கியப் பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. நகரின் மத்தியப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பயங்கர வாதிகள் தரப்பில் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. அரசுப் படைகள் தரப்பில் 4 பேர் மட்டும் காயமடைந்துள்ளனர்” என்றார். இதனிடையே கிளர்ச்சியா ளர்கள் கூறுகையில், மரியூபோல் நகர சண்டையில் எங்கள் தரப்பில் 5 பேர் இறந்துள்ளனர்” என்றனர்.
உக்ரைனின் புதிய அதிபராக கடந்த மே 25-ம் தேதி பொறுப்பேற்ற பெட்ரோ பொரொஷென்கோ, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.