எகிப்தில் எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் நிறுவனருமான முகமது கமால் என்பவரை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.
எகிப்தின் பிரதான எதிர்க்கட்சி யான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மூத்த தலைவராக பதவி வகித்தவர் முகமது கமால் (61). குண்டு வெடிப்பு உள்ளிட்ட இரு வழக்குகளில் கமாலுக்கு எகிப்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற கமால் கெய்ரோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து குண்டுவெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்த போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கமாலும், யாசிர் ஷெஹதா அலி ரகாப் என்பவரும் உயிரிழந்தனர்.