கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த ஜூன் 15-ம் தேதி தொடங்கிய யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வுக் குழுக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் உலகம் முழுவதும் 30 இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக தேர்வு செய்யப்பட்டன. இந்தியாவின் மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா மற்றும் குஜராத் ராணி கி - வாவ்படித்துறை ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
கூட்டத்தில் தேர்வான உலகப் பாரம்பரிய சின்னங்கள்
பாலஸ்தீனத்தின் தெற்கு ஜெருச லேமின் பட்டீர் பகுதி கலாச்சாரம் மற்றும் வளமான ஆலிவ், திராட்சை விளைச்சலுக்காக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அதன் நிலையற்ற அரசியல், சமூக சூழல்களால் அந்தப் பகுதி அபாயப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.
ஜப்பானின் வடக்கு டோக்கியா வில் 1872-ம் ஆண்டு டாமியோகா பட்டு உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டது. பாரம்பரிய தொழில் நுட்பம் வாய்ந்த இதனை அந்நாடு பாதுகாத்து வருகிறது. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் ஜெட்டா உலகப் பாரம்பரியச் சின்னமாகியுள்ளது. கருங் கடல் பகுதியிலுள்ள இதனை இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா வின் நுழைவாயில் என்பார்கள்.
போட்ஸ்வானா நாட்டின் ஓக்கா வேங்கோ டெல்டா உலகின் மிகச் சிறந்த உயிரி பல் வகைமையைக் கொண்டது. இங்கு சிங்கம், வெள்ளை காண்டாமிருகம் போன்ற அழியும் நிலையிலுள்ள உயிரினங் கள் வசிக்கின்றன. இதுவும் இனி உலகப் பாரம்பரியச் சின்னம்.
ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சீனாவின் பாரம்பரிய பட்டுப் பாதை இனி உலகப் பாரம்பரியச் சின்னம்.மெக்ஸிகோவில் இருக்கும் பழமையான மாயா நகரம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. உலகின் மிகப்பழமையான நடை பாதை “ஹபாஸ்னன் – அன்டின்” அதாவது, ஒற்றையடிப் பாதை. அர்ஜெண்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வேடார், பெரு ஆகிய நாடுகளின் காடுகள், பனிமலை, கடற்கரை வழியாக பயணிக்கிறது இது.
ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் இருக்கும் வாடன் கடல் மிகச் சிறந்த உயிரி பல் வகைமை கொண்டது. 2007-ம் ஆண்டில் இதன் குறிப்பிட்ட பரப்பளவு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட நிலை யில், தற்போது முழுப் பகுதியும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபாய பட்டியலில் இருப்பவை!
தான்சானியாவில் இருக்கும் கில்வா கிஸ்வானி மற்றும் சான்கோ மினரா நகரம் ஒருகாலத்தில் உலகின் முக்கியமான வணிக நிலையமாக இருந்தது. அழிவுகள் காரணமாக கடந்த 2004-ம் ஆண்டு அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இது, இந்த ஆண்டு அந்த நாட்டு அரசு எடுத்த பாதுகாப்பு முயற்சிகளால் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டது.
பொலிவியா நாட்டிலுள்ள போட் டோஸி புராதன நகரம் அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அளவுக் கதிகமாக சுரங்கங்கள் வெட்டி சுற்றுச்சூழலை நாசப்படுத்தியது இதற்கு காரணம். ஆஸ்திரேலியாவின் கிரேட் பவளத் திட்டு பாறை கடல் பகுதி யில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனை அபாயப்பட் டியலில் சேர்க்க யுனெஸ்கோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொண்ட தால் முடிவு ஓர் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.