உலகம்

‘அல்லா’ பெயரைப் பயன்படுத்த கிறிஸ்தவ நாளிதழுக்குத் தடை

செய்திப்பிரிவு

மலேசியாவில், கத்தோலிக்க தேவாலயம் சார்பில் வெளியிடப் படும் ‘ஹெரால்ட்’ நாளிதழின் மலாய் மொழி பதிப்பில், கடவுளை குறிப்பிட அல்லா என்கிற அரபு மொழிச் சொல் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல்லை பயன்படுத்த 2007-ம் ஆண்டு மலேசிய அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து ‘ஹெரால்டு’ நாளிதழ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை புத்ரஜெயாவில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி ஆரிபின் ஜக்காரியா தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில், அரசின் தடை உத்தரவு சரியானது தான் என்றும், வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT