அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டில், பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இரண்டு பெண்கள், ட்ரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பீப்பிள் மேகஸின் பெண் நிருபர் ஒருவர் கூறியபோது, ட்ரம்ப் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கூறியுள்ளார். விமானப் பயணத்தின் போது தனக்கு அருகே அமர்ந்திருந்த ட்ரம்ப் தகாத இடங்களில் தொட்டதாக ஜெசிகா என்பவர் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ட்ரம்பின் பிரச்சாரக் குழு மறுத்துள்ளது.