உலகம்

இந்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீருக்குள் அதிரடியாக புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளித்துள்ளது.

இந்தியாவின் இச்செயல் தற்காப்பு நடவடிக்கை என்றும், தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான முடிவுகளை மேற் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் ஆப்கானிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்ற, இந்தியாவுக்கான ஆப் கானிஸ்தான் தூதர் ஷாய்தா அப்தாலி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்டை நாட்டின் பாது காப்புக்கு சவால்விடும் தீவிரவாதி களின் சொர்க்க புரியாக தங்களின் பகுதி திகழ எந்த நாடும் அனுமதிக் காது. ஒருவேளை எவ்வித தடையு மின்றி, குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாத அமைப்புகள் இருந்து கொண்டிருந்தால், தற்காப்பு நட வடிக்கையாக இது போன்ற தாக்கு தல்கள் நடப்பது ஏற்புடையதே.

தீவிரவாத அமைப்புகளில் ஆப்கானிஸ்தான் வேறுபாடு களைக் காண்பதில்லை. எந்த நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந் தாலும், தீவிரவாத அமைப்புகள் அபாயகரமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இவ்வாறு அப்தாலி கூறினார்.

SCROLL FOR NEXT