உலகம்

பாக். உடனான இந்தியாவின் எல்லை மூடல் நடவடிக்கையை எச்சரித்த சீன வல்லுநர்கள்

ஏஎன்ஐ

உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான இந்தியாவின் எல்லை மூடல் நடவடிக்கை இரு நாடுகள் உறவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சீன வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஹு சியோங்கும், ஹாங்காய் நகரின் மத்திய ஆசிய நாடுகள் சர்வதேச மையத்தின் இயக்குனராகவுள்ள வாங் டியுஹாவும் இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தங்கள் பார்வையைத் தெரிவித்துள்ளனர்.

அதில், "பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்டுள்ள எல்லை மூடல் நடவடிக்கை பகுத்தறிவற்ற முடிவாகும். உரி தாக்குதலை யார் நிகழ்த்தினார்கள் குறித்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தான் உரி தாக்குதலை நிகழ்த்தியது என்பதற்கான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானுடனான இந்தியாவின் எல்லை மூடல் நடவடிக்கை இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு மேலும் தடையை ஏற்படுத்தும்.

இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனா-இந்தியா-பாகிஸ்தான் உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது" எனக் கூறியுள்ளனர்.

முன்னதாக உரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து கூட்டப்பட்ட அமைச்சர்கள் சந்திப்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி அடுத்த ஆண்டு டிசம்பர் 2018 வரை மூடப்படும் என்று கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT