அமெரிக்கன் பிலிம் இன்ஸிடிட்யூட்டின் 42-வது வாழ்நாள் சாதனையாளர் விருது, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபாண்டா வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற விழாவில் ஜேன் ஃபாண்டா (76) இவ்விருதை பெற்றுக்கொண்டார். மெரில் ஸ்ட்ரீப், சல்லி ஃபீல்ட், சாண்ட்ரா புல்லக், லிலி டாம்லின், கேமரூன் டயஸ் ஆகியோர் ஜேன் ஃபாண்டாவுக்கு சல்யூட் செய்தனர்.
விருதை பெற்றுக்கொண்ட ஃபாண்டா, “வாழ்நாள் சாதனையா ளர் விருதுபெற்ற பெண்மணிகளில் நானும் இணைவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
“கேள்வி கேளுங்கள், உற்சாக மாக இருங்கள். ஆர்வம் தருபவ ராக இருப்பதை விட ஆர்வம் கொண்டவராக இருப்பது மிகவும் முக்கியம்” என்றார் ஃபாண்டா. 2009-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மைக்கேல் டக்லஸ், ஜேன் பாண்டாவுக்கு விருதினை வழங்கினார்.
“ஜேன் அற்புதமான நடிகை மட்டுமல்ல. உலகின் மிகப் பெரிய பன்முகத் திறமையாளர்” என்றார் மைக்கேல் டக்லஸ். ஜேன் ஃபாண்டா தனது தந்தை ஹென்றி ஃபாண்டாவை பின்பற்றி இவ்விருதைப் பெற்றுள்ளார். ஹென்றி ஃபாண்டா 1978-ல் அமெரிக்கன் ஃபிலிம் இன்டிடியூட் டின் 6-வது வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர் ஆவார். இதுபற்றி குறிப்பிட்ட மைக்கேல் டக்லஸ், “ஜேன், திரையுலகின் உண்மையான அரசி. ஆனால் பிறப்பால் அல்ல. திறமையால்” என்றார்.
ஜேன் ஃபாண்டாவின் கணவர் ரிச்சர்டு பெர்ரி, மகனும் நடிகருமான ட்ராய் கேரிட்டி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். ஜேன் ஃபாண்டா இருமுறை (1971, 79) ஆஸ்கர் விருது பெற்றவர்.