உலகம்

ஐஎஸ் அட்டகாசம்: ஆப்கன் மக்கள் 30 பேர் கடத்திக் கொலை

ஏஎஃப்பி

மத்திய ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினரால் பொதுமக்கள் 30 பேர் கடத்திக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆப்கானிஸ்தானிலுள்ள கோர் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஐஎஸ் அமைப்பினர், பொதுமக்கள் 30 பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதில் சிறுவர்களும் அடங்குவர்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் வேட்டையில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தளபதி ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாகவே ஐஎஸ் அமைப்பு பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT