உலகம்

சீன நிலக்கரி சுரங்க வெடிப்பு சம்பவத்தில் 33 பேர் சிக்கித் தவிப்பு

நியூயார்க் டைம்ஸ்

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 33 பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

மீட்புப் பணி வீரர்களின் தீவிர நடவடிக்கையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கியுள்ள பணியாளர்களை காப்பாற்ற மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை சரியான தகவல் வெளிவரவில்லை.

SCROLL FOR NEXT