அமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தீபாவளி பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிட வேண்டும் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அந்தக் கோரிக்கையை அமெரிக்க தபால் துறை ஏற்று, தீபாவளிக்காக சிறப்பு தலையை வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தீபாவளி சிறப்பு தபால் வெளியீட்டு விழா நடைபெற்றது.