இராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை நடத்திய கார் குண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து இராக் உள்துறை அமைச்சகம் கூறும்போது, "பாக்தாத்தின் தென் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" என்று கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் 4 பேர் ராணுவ வீரர்கள் என மகமுதியா மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தொடர்ந்து பாக்தாத்தின் தென் பகுதியில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வருவதால் இந்தத் தாக்குதலையும் ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தியிருக்ககூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.