உலகம்

ஆதாரங்களில்லாமல் பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டுகிறது: சர்தாஜ் அஜீஸ் சாடல்

பிடிஐ

எந்தவொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும், ஆதாரமில்லாமல் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு விவகார பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சாடியுள்ளார்.

“பாகிஸ்தான் மீது எந்தவொரு திடமான ஆதாரங்களும் இல்லாமல் இந்தியா எந்தவொரு தீவிரவாதத் தாக்குதலையடுத்தும் குற்றம்சாட்டி வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கொல்லைப்புற ராஜீய உறவுகள் ஏதுமில்லை.

இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டுப் பேச்சு வார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரம் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் ஐ.நா. உரையில் முக்கியத்துவம் பெற்றது.

பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை, நாடு சரியான திசையில்தான் பயணித்து வருகிறது.

சீனாவுடன் பாகிஸ்தான் நெருங்கிய உறவுகள் வைத்திருப்பதே மேற்கத்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் பற்றிய கவலைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு நாடுகளுடன் கூட பாகிஸ்தான் நல்ல இருதரப்பு உறவுகளுடனேயே இருந்து வருகிறது” என்றார் சர்தாஜ் அஜீஸ்.

SCROLL FOR NEXT