ஹவானா: தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.
கியூபாவில் உள்ள மடான்சாஸ் சிட்டியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது எதிர்பாராத விதமாக சனிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். விபத்தினால் உண்டான கரும்புகைகள் சுமார் 100 கிமீ வரை பரவியுள்ளது.
ஹெகாப்டரை கொண்டு நீரை பீய்ச்சி தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, சர்வதேச நிபுணர்கள் மறும் உலக நாடுகளிடம் ஆலோசனைகளையும், உதவியையும் கியூபா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 121 பேர் காயமடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக எரிவாயு பற்றாக்குறை கியூபாவில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அங்குள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது கியூபா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.