உலகம்

சிரியாவில் திருமண நிகழ்வில் தாக்குதல்: 32 பேர் பலி

ஏஎஃப்பி

சிரியாவில் திருமண நிகழ்வில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 32பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சிரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின் திருமண நிகழ்வில் திங்கட்கிழமை நள்ளிரவு நுழைந்த தீவிரவாதி ஒருவர், தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 32 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலை நேரில் பார்த்தவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில் கூறியிருப்பதாவது, "மணமகள், மணமகன் இருவரும் திருமணத்துக்கான உறுதி மொழிகளை எடுத்து கொண்டிருக்கும் போது அந்த நபர் தனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் திருமண மண்டபத்தில் குழுமியிருந்த பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" என்றார்.

இந்தத் தற்கொலைப்படை தாக்குதலில் மணமகன், மணமகள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

இந்தத் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT