உலகம்

சிரியா: வான்வழித் தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் 3 பேர் பலி

ஏஎஃப்பி

சிரியாவில் போராட்டக்காரர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

சிரியாவின் அலெப்போ நகரின் அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) போராட்டக்காரர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் மூன்று பேர் பலியானதாகவும், 14 பேர் காயமடைந்தாகவும் சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, புதன்கிழமை சிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சிரியாவில் குழந்தைகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக இருந்தால் இது போர்க்குற்றமாக கருதப்படும் என யுனிசெப் கூறியிருந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT