அல்போன்சா மாம்பழத்துக்கு தடை விதித்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் அடுத்ததாக, ,இந்தியாவிலிருந்து இறக்கு மதியாகும் வெற்றிலைகளுக்கு தடை விதிக்கும் என தெரிகிறது.
இந்தியாவிலிருந்து இறக்கு மதியாகும் அல்போன்சா மாம் பழங்களில் பூச்சிகள் இருப்பதாக கூறி அதற்கு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா ஏற்றுமதி செய்யும் வெற்றிலைக ளில் நுண்ணுயிர்க் கிருமி தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் ஒன்றி யத்தில் செயல்படும் உணவு, தீவன கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
முன்னதாக, வங்கதேசத்து வெற்றிலைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றியம் தடை விதித்தது.
வெற்றிலைகளில் நுண்ணுயிர் கிருமிகள் தொற்று இருப்பதாக பிரிட்டன் எச்சரிக்கை செய்ததை அடுத்து இந்தியா, தாய்லாந் திலிருந்து வெற்றிலை இறக்குமதி செய்ய தாற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. சால்மெனெல்லா நுண்ணுயிர் தொற்று உடைய வெற்றிலைகள் வயிற்றுப்போக்கு, குமட்டலை ஏற்படுத்தக் கூடியது.
கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு 111 எச்சரிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் உணவு தர கண்காணிப்பு அமைப்பு அனுப் பியது. அவற்றில் கருவேப்பி லைகள் பற்றி 12, வெண்டைக் காய் பற்றி 84 எச்சரிக்கைகள் அனுப் பப்பட்டன. செப்டம்பரில் ஐரோப் பிய நாடுகள் கூட்டமைப்பின் அதிகாரிகள் இந்தியா வரவுள் ளனர். ஏற்கெனவே பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய் போன்ற வற்றுக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றியம் தடைவிதித்துள்ளது.