உலகம்

பால்பாயின்ட் பேனாவைக் கண்டுபிடித்த ஜோஸ் பிரோவின் பிறந்தநாளை டூடுள் போட்டுக் கொண்டாடிய கூகுள்

செய்திப்பிரிவு

பால்பாயின்ட் பேனாவைக் கண்டுபிடித்த லடிஸ்லோ ஜோஸ் பிரோவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கூகுள் தனது முகப்புப் பக்கத் தில் டூடுள் போட்டுக் கொண் டாடியது.

ஹங்கேரியில் உள்ள புதா பெஸ்ட்டில் 1899 செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தவர் லடிஸ்லோ ஜோஸ் பிரோ. யூதக் குடும்பத்தில் பிறந் தவரான ஜோஸ் பிரோ, செய்தி யாளராக பணியாற்றினார். அப் போது அச்சகத்தில் பயன்படுத்தப் படும் மை, எளிதில் உலர்ந்து விடு வதுடன் காகிதத்தில் தேவையற்று பரவுவதில்லை என்பதையும் கண் டார். ஆகவே, மை ஊற்றி எழுதும் அப்போதைய பேனாக்களுக்கு மாற்றாக, இந்த மையை ஊற்றி எழுதும் பேனாவைக் கண்டறிய முனைந்தார்.

வழக்கமான பேனாக்களில் அச்சக மையைப் பயன்படுத்து வது சிரமமாக இருந்தது. ஆகவே, தனது சகோதரர் ஜாஜ்ரி பிரோ வுடன் இணைந்து எழுதுமுனை யில் பந்தை சுழலும் வகையில் பொருத்தி, மையில் நனைந்து பின் சுழன்று காகிதத்தில் எழுதும் வகையில் தற்போது நடைமுறை யில் உள்ள பந்துமுனைப் பேனா (பால் பாயின்ட்) வைக் கண்டறிந்தார்.

புதாபெஸ்ட்டில் 1931-ல் நடை பெற்ற சர்வதேச கண்காட்சி யில் இந்த பேனாவை முதன்முறை யாக அறிமுகம் செய்தார் பிரோ. பின்னர் 1938-ல் இவ்வகைப் பேனாக்களுக்கு காப்புரிமை பெற்றார்.

இரண்டாம் உலகப்போரின் போது பிரோ கண்டறிந்த பால் பாய்ன்ட் பேனாவை பிரிட்டன் விமானப் படையினர் வாங்கி பயன் படுத்தினர். பிரோ சகோதரர்கள் நாஜிப் படையிடமிருந்து தப்புவதற்காக 1943-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு புலம் பெயர்ந்தனர்.

SCROLL FOR NEXT