உலகம்

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை: ஜி-7 நாடுகள் உறுதி

ஏபி

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஜி-7 நாடுகள் உறுதியேற்றுள்ளனர்.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 42-வது கூட்டம் ஜப்பானில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் ஜப்பா னின் அகியூ நகரில் உள்ள நட்சத் திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் நாடுகளுக்கு இடையி லான பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, மோசடி உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக உலகத்துக்கு அச்சு றுத்தலாக விளங்கும் தீவிரவாதம் குறித்து விவாதித்தனர். பின்னர் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் நிதியுதவி செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுப் பது, பெருமளவு பண பரிவர்த்தனை நடக்கும் போது கண்கா ணிப்பது, சந்தேகத்துக்கிடமான பணிவர்த்தனைகள் குறித்த தக வல்களை பரிமாறிக் கொள்வது என்று முடிவெடுத்தனர். இதற்கான செயல்திட்டம் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.

தீவிரவாதிகளின் நிதி நெட் வொர்க்கை கண்டறிந்து நாடுகளுக்கு இடையில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை தடுக்க நிதியமைச்சர்கள் உறுதியேற்றனர்.

SCROLL FOR NEXT