உலகம்

அமெரிக்கா செல்லும் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

செய்திப்பிரிவு

வரும் ஜூன் 7-ம் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகத் தலைவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்த ஆண்டு பேசும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி எதிர்க்கட்சியான குடியரசு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இணைந்து மோடியை வரவேற்க உள்ளனர்.

வரும் ஜூன் 7-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்லும் மோடி அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். ஜூன் 8-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

SCROLL FOR NEXT