உலகம்

35 ஆயிரம் வீடுகளுக்கு பாதிப்பு, வெள்ள சேதம் ரூ.13 ஆயிரம் கோடி: வெளிநாடுகளிடம் உதவி கோருகிறது இலங்கை

ஏஎஃப்பி

வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வெளி நாடுகளிடம் உதவி கோரியுள்ளது இலங்கை.

இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதில், ஏற்பட்ட வெள்ளத்தில் தலைநகர் கொழும்பு மிக மோசமாக பாதிக் கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந தனர். 200 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.13,400 கோடி) அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நி லையில், சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை கோரியுள் ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயகே செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத் தால் 35 ஆயிரம் வீடுகள் சேத மடைந்துள்ளன. கொழும்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதிகபட்ச உதவியை எதிர்பார்க்கிறோம். வெளிநாடுகள் புனரமைப்புக்கான செலவில் 75 சதவீதத்தை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

புயல் நீர் சேகரிப்புக்கான தாழ்வான பகுதிக ளில் கட்டுப் பாடற்ற வகையில் மேற்கொள் ளப்பட்ட கட்டுமானங் கள்தான், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்றில் ஒரு பங்கு நகர மக்கள் பாதிக்கப்படுவதற் குக் காரணம்.

சதுப்பு நிலக்காடுகள் ஆக்கிர மிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப் பட்டதுதான் வெள்ளத்துக்கு பிரதான காரணம். மீண்டும் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுக்க, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய கட்டுமான விதிமுறைகள் அமல் செய்யப்படும்.

வெளிநாடுகளின் உதவி பெரும்பாலும் கடனாகவும், மானி யமாகவும் வரும் என நம்புகி றேன். எனினும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தவிர் கக்கூடிய வகையில் நகர்ப்புற கட்டமைப்பு திட்டங்களையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள் அவசரகால உதவியை அனுப்பின. இந்தியா இரு கப்பல்கள் மற்றும் விமானத் தில் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.

இலங்கை நாடாளுமன்றம் அவசரமாகக் கூடி, மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியது. இதுவரை 101 பேர் வெள்ளத்தால் இறந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. கெகலே மாவட் டத்தில் 100 பேர் காணாமல் போயிருப்பதாக தெரியவந் துள்ளது.

கெகலே மாவட்டத்தில் நிலச்சரிவு முழுமையாக இரு கிராமங்களை பாதித்துள்ளது. அங்கு புதையுண்ட மக்களைத் தேடும் பணியில் ராணுவம் ஈடு பட்டுள்ளது. அங்கு 66 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரோனு புயல் இலங்கையைக் கடந்து விட்டதால், மழை குறைந்துள்ளது. அதேசமயம் வங்கதேசத்தின் தென் பகுதியை கடந்த சனிக்கிழமை தாக்கியதில், அங்கு 24 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT