உலகம்

மே 13-ல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா

செய்திப்பிரிவு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வரும் 13-ம் தேதி இந்தியா வருகிறார்.

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனி யில் கும்பமேளா விழா நடை பெற்று வருகிறது. இந்த விழாவின் இறுதிக்கட்ட நிகழ்ச்சிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதில் இலங்கை அதிபர் சிறிசேனாவும் பங்கேற் கிறார்.

கும்பமேளா விழாவை தொடர்ந்து பிரதமர் மோடியும் அதிபர் சிறிசேனாவும் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது கொழும்பு துறைமுக திட்டத்தை செயல்படுத்த சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிபர் சிறிசேனா பதவியேற்ற உடன் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது துறைமுக திட்டம் மீண்டும் செயல் படுத்தப்பட உள்ளது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஹம்பாந்தோட்டை துறை முகம், மத்தள விமான நிலையம் ஆகியவையும் சீனாவின் கைக்கு செல்லக்கூடும் என்று இந்திய தரப்பில் சந்தேகம் எழுப்பப்படு கிறது. அதிபர் சிறிசேனாவின் டெல்லி பயணத்தின்போது இந்த விவகாரங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT