உலகம்

பராகுவேயில் வெள்ளம்: 2 லட்சம் பேர் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

தென் அமெரிக்க நாடான பராகுவே யில் கன மழை, வெள்ளம் காரண மாக, பராகுவே, பரானா நதிகளுக்கு அருகில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நீம்புகு மாநில ஆளுநர் கார்லோஸ் சில்வா கூறுகையில், “கன மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீம்புரு மாநிலத்தில் 8 ஆயிரத்துக் கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள் விநியோகம் தடைபட்டுள்ளது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் இங்குள்ள நில வரத்தை மதிப்பிட்டுள்ளனர். வெளி நாடுகளில் இருந்து விரைவில் உதவி கிடைக்கும் என நம்புகி றேன்” என்றார். இந்நிலையில் பராகுவே நெருக்கடி கால பணிகள் தலைமைச் செயலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளின் உணவுக்காக அரசு ரூ. 18 கோடி செலவிட்டுள்ளது. வெள் ளத்தில் சிக்கியவர்களில் பெரும் பாலானோர் மீட்கப்பட்டு, மேடான பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT