உலகம்

சீனாவில் தமிழக துறவி போதி தர்மர் நிறுவிய புத்தர் கோயிலில் பிரணாப் வழிபாடு

செய்திப்பிரிவு

தமிழகத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி போதி தர்மர் சீனாவில் நிறுவிய புத்தர் கோயிலில் குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழிபாடு செய்தார்.

கி.பி. 5-ம் நூற்றாண்டில் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர் போதி தர்மர். காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த அவர் புத்த துறவியாக மாறி சீனாவில் புத்த மதத்தை தழைத்தோங்கச் செய்தார்.

சீன வரலாற்று ஆவணங்களின் படி இந்தியாவில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் பயணம் செய்து போதி தர்மர் சீனா சென்றடைந்துள் ளார். அங்கு குவாங்சூ நகரில் வாழ்ந்த அவர் புத்த மதத்தை அந்த நாடு முழுவதும் பரப்பினார் .

கி.பி. 526-ம்ஆண்டில் அந்த நகரில் லியாங் வம்ச மன்னர்களின் உதவியுடன் ஹுவாலின் புத்தர் கோயிலை போதி தர்மர் நிறுவினார்.

அந்த கோயிலின் நுழைவு வாயிலில் போதி தர்மருக்கு 75 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கல்வெட்டில் ‘மேற்கில் இருந்து வந்த துறவி’ என்று பொறிக்கப் பட்டிருக்கிறது.

தற்போது சீனாவுக்கு 4 நாட்கள் பயணமாகச் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குவாங்சூ நகரில் உள்ள ஹுவாலின் புத்தர் கோயிலுக்கு புதன்கிழமை சென்றார். கோயிலின் நுழைவுவாயிலில் உள்ள போதி தர்மர் சிலைக்கு மரியாதை செலுத் தினார். அந்த கோயிலின் புத்த மதத் துறவிகள், தமிழக துறவி போதி தர்மரின் பெருமைகள் குறித்து பிரணாபிடம் எடுத்துரைத் தனர்.

புத்த மதத்தில் மொத்தம் 28 குருக்கள் உள்ளனர். அவர்களில் கடைசி குரு போதி தர்மர் என்பதை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்தியத் துறவியோடு தொடர் புடைய புத்தர் கோயில் என்பதால் பிரணாப் அங்கு சென்று வழிபாடு செய்தார். அந்த நகரில் வசிக்கும் இந்தியர்கள் குடியரசுத் தலைவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து சீனாவின் பீகிங் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த விழாவில் பிரணாப் பேசி யதாவது:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறு பாடுகள் இருப்பது உண்மைதான். இந்தப் பிரச்சினைகளுக்கு இருதரப் பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.

குறிப்பாக எல்லை வரையறை யில் பிரச்சினைகள் நீடிக்கின்றன. அண்டை நாடுகளுடன் இதுபோன் றபிரச்சினைகள் எழுவது இயல் பானது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை நமது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் சுமையாக மாறிவிடக்கூ டாது. இதற்கு அரசியல்ரீதியாகவும் பாரம்பரிய அறிவின் மூலமூம் விரைந்து தீர்வு காணப்பட வேண் டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியா சீனா இடையிலான எல்லை 3488 கி.மீட்டர் நீளம் கொண்டது. இதில் 2000 கி.மீட்டர் எல்லைப் பகுதி பிரச்சினைக்குரி யது என்று சீனா கூறுகிறது. குறிப்பாக அருணாச்சலப் பிரதேச மாநிலம் தங்களுடைய பகுதி என்றும், காஷ்மீரின் ஒரு பகுதி தங்களுடையது என்றும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 

SCROLL FOR NEXT