வெள்ளை பிரெட்டை விரும்பி உண்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதை வெள்ளை பிரெட் ஊக்குவிக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேளாண்மை மற்றும் உணவு மருத்துவத்திற்கான அமெரிக்க மருத்துவ சங்க இதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. நம் உடல்நலத்தில் முக்கியப் பங்காற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட சில நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை உடலில் குறையும் போது மக்கள் நோய்வாய்ப்படு கிறார்கள். நம் உடலிலுள்ள நுண்ணுயி ரிகளைச் சீராக வைத்திருக்க, முறை யான உணவு முறை அவசியம். நார்ச்சத்து மற்றும் புரோபயாட்டிக் வகை உணவுகள் எந்த அளவு தாக் கத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வு செய்யப்பட்டது.
சில ஆய்வாளர்கள், நறுமணப் பொருள்கள், தேநீர், பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் பாலிபெனோட்கள், நன்மை செய்யும் நுண்ணுயிர் வளர்ச்சிக்கு எவ்வகையில் உதவுகின்றன என ஆய்வு செய்தனர். இதற்காக ஆரோக்கியமான 38 இளைஞர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிட்ரஸ் பழங்களில் காணப்படும் பெக்டின் மூலக்கூறு அதிக அளவில் உட்கொள்ளப்பட்டால் அது மனித உடலில் உள்ள நன்மை பயக்கும் சில பாக்டீரியாவை அழிக்கிறது எனத் தெரியவந்தது.