இரானில் இஸ்லாம் கலாச் சாரத்துக்கு விரோதமாக இன்ஸ்டாகிராம் மூலம் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரானில் கடந்த 1979-ல் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டது. அப்போது முதல் வீடுகளை விட்டு வெளியே வரும் பெண்கள் தங்களது தலை முடியை மறைத்து உடை அணிய வேண்டும் என கட்டுப் பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்ஸ்டா கிராம் மூலம் சில பெண்கள் மாடலிங் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் 58 மாடல் அழகிகள், 51 பேஷன் வடிவமைப் பாளர்கள் என 170 பேர் இன்ஸ்டா கிராம் மூலம் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அவர்களில் 8 பேரை இரான் போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.