பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தேர்தல் நடந்து கொண்டிருந்த போது வாக்குச்சாவடிகளை மர்ம நபர்கள் சூறையாடினர். இது தொடர்பாக நடந்த வன்முறையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் மற்றும் 18,000 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைநகர் மணிலா அருகே உள்ள புறநகர் பகுதியான ரோஸாரியோவில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ரோஸாரியோ நகர முதன்மை போலீஸ் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மாகாணமான மகுயின் டானாவோவில் உள்ள கிண்துலு கனில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்குள் அரசியல்வாதி களுக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது ஒரு வாக்காளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதே போல் தெற்கு மாகாணத் தின் முக்கிய நகரமான கோட்டா பேடோவில் உள்ள ஒரு சந்தைப் பகுதி மீது வன்முறையாளர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் ஒருவர் உயிரிழந்தார். அதன் அருகே உள்ள சுல்தான் குதாரத் நகரில் ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழைந்து 20-க்கும் மேற்பட்டோர் வாக்குப்பதிவு இயந்திரங்களை சூறையாடி சென்றனர்.
வடக்கு மாகாணமான அப்ராவில் மேயர் வேட்பாளர்கள் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
எனினும் பிலிப்பைன்ஸ் முழுவதும் வாக்குப்பதிவு அமைதி யாக நடந்திருப்பதாகஅந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.
பிலிப்பைன்ஸில் அரசியல் வன்முறை என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு போதிய சட்டங்கள் இல்லாதது மற்றும் வாரிசு அரசியலே இத்தகைய வன் முறைகள் நிகழ்வதற்கு காரணம் என கூறப்படுகிறது.