உலகம்

தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்காவில் பயன்பாட்டில் இல்லாத தங்கச் சுரங்கம் ஒன்றில் 8 தொழிலாளர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்ததாக போலீஸார் திங்கள் கிழமை தெரிவித்தனர்.

ஜொகன்னஸ்பர்க் அருகே உள்ள பெனோனியில் கைவிடப் பட்ட நிலையில் உள்ள தங்கச் சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் இறந்து கிடந்ததை அந்த சுரங்கத் தின் பாதுகாவலர் பார்த்துள்ளார். இதில் 2 பேரின் சடலம் சுரங்கத்துக் குள்ளும் 6 பேரின் சடலம் மேற்பரப் பிலும் இருந்ததாக அவர் தெரிவித் ததாக போலீஸார் தெரிவித்துள் ளனர். இறந்தவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்த தாகவும், இவர்கள் இன்னும் அடை யாளம் காணப்படவில்லை எனவும் போலீஸ் உயர் அதிகாரி பால் ராமலோகோ தெரிவித்துள்ளார்.

இந்த 8 பேர் கொல்லப்பட்டதற் கான காரணம் தெரியவில்லை என காவல் துறை செய்தித் தொடர் பாளர் லுங்கெலோ தலாமினி தெரிவித் துள்ளார். ஆனால், கைவிடப் பட்ட சுரங்கங்களில் சட்டவிரோத மாக தங்கம் எடுப்பதில் ஈடுபட்டுள்ள போட்டியாளர்கள் இவர்களை சுட்டுக் கொன்றிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலையில்லா திண்டாட்டம், வறுமை காரணமாக கைவிடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சட்டவிரோத மாக மிச்சம் மீதி உள்ள தங்கத்தை சேகரிக்கும்போது இரு பிரிவி னருக்கிடையே மோதல் ஏற்படுவது அங்கு வழக்கமாக உள்ளது.

SCROLL FOR NEXT