உலகம்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் இலய் வாலக் மறைவு

செய்திப்பிரிவு

தி குட், தி பேட் அண்ட் தி ஹக்லி' உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் இலய் வாலக் (Eli Wallach) காலமானார். அவருக்கு வயது 98.

1966-ம் ஆண்டு இத்தாலியில் இருந்து செர்ஜியோ லியோனின் இயக்கத்தில் வெளியானப் படம் தி குட், தி பேட் அண்ட் தி ஹக்லி'. அதில், அக்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் இலய் வாலக்.

இலய் வாலக் 1915-ம் ஆண்டு, டிசம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். அவர் நடித்த அனைத்து படங்களிலும் தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி சர்வதேச திரைப்படங்களில் உச்சத்தில் இருந்தார். இவர், மெக்னிபிஷியன்ட் செவன், காட்ஃபாதர் 3, தி ஹாலிடே, ஆலிவர் ஸ்டோனின் வால் ஸ்ட்ரீட்: மனி நெவர் சிலீப்ஸ் இன் நியூயார்க், ரோமன் போலான்ஸ்கி என மேற்கத்திய பாணியில் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

ஜப்பானிய திரைப்படமான செவன் சாமுராயின் ரீமேக்கான மெக்னிபிஷியன்ட் செவன், இவருக்கு புகழைத் தேடி தந்தது.

சினிமாவிற்கு இலய் வாலக் அளித்த வாழ்நாள் பங்களிப்பிற்காக, அவருக்கு 2010 ஆம் ஆண்டு கவுரவ அகாதமி விருது வழங்கப்பட்டது.

நியூயார்க்கில் தனது மனைவி ஆனி ஜாக்சனுடன் வாழ்ந்து வந்த இலய் வாலக் தனது 98 வயதில் மறைந்தார்.

SCROLL FOR NEXT