இராக் தலைநகர் பாக்தாதில் பொதுமக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலியாயினர். இதில் 42 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை யைச்சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் கூறும்போது, “பாக்தாதின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள புனிதத் தலமான கதிமியாவுக்கு நடைபயணமாக புனித யாத்திரை மேற்கொண்ட ஷியா பிரிவினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
அதேநேரம், திறந்தவெளி சந் தைப் பகுதியைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட் டதாக மற்றொரு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இருவேறு வகையான கருத்துகள் பற்றி உடன டியாக உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தாக்கு தலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
பாக்தாதில் கடந்த ஒரு மாதத் தில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குத லில் 40-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகி உள்ளனர். கடந்த மார்ச் 25-ம் தேதி ஒரு விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்த வெடி குண்டு தாக்குதலில் 29 பலியா யினர்,