எப் 16 ரக போர் விமானங்களை மானிய விலையில் அமெரிக்க அரசு வழங்காவிட்டால் வேற்று நாட்டு போர் விமானங்களை தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து 8 எப் 16 ரகபோர் விமானங்களை வாங்கு வது தொடர்பாக பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்தது. ரூ.4,650 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் ரூ.2,850 கோடியை மானிய மாக வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது. அதாவது பாகிஸ் தான் ரூ.1,800 கோடி செலுத்தினால் போதும்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்கள்கிழமை செய்தியாளர் களிடம் கூறும்போது, “பாகிஸ் தானுக்கு போர் விமானங்களை வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. எனினும், அவற்றை மானிய விலையில் வழங்க பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, போர் விமானங் களுக்கான முழு தொகையையும் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு அந்த நாட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.
இதனிடையே, முழு தொகை யையும் கொடுத்து போர் விமானங் களை வாங்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் தெரிவித் துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோ சகர் சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, “எப் 16 போர் விமானங்களை அமெரிக்கா மானிய விலையில் வழங்காவிட்டால், பாகிஸ்தான்-சீனா கூட்டு தயாரிப்பான ஜேஎப்-17 தண்டர் போர் விமானங்களை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பயன்படுத்துவோம்.
ஒசாமா பின்லேடன் இருப் பிடத்தைக் கண்டறிய அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் ஷகில் அப்ரிதியை கைது செய்துள்ளோம். அவரை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரி வருகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்ரிதி அவர் களுக்கு ஹீரோவாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு குற்றவாளி.
இந்தியாவின் ராணுவ பலம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதைக் கட்டுப் படுத்தாவிட்டால் பாகிஸ்தானும் தனது பலத்தை அதிகரிக்கும்” என்றார்.