உலகம்

இராக் பிரதமருடன் ஜான் கெர்ரி திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பாக்தாதில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அரசுப் படைகளுக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எல். கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. மோசூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எல். படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தப் போரில் தங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் இராக் பிரதமர் நூரி அல் மாலிக் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் போரில் நேரிடையாக ஈடுபட அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்ப வில்லை.

இந்நிலையில் திடீர் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி திங்கள் கிழமை பாக்தாத் சென்றார். அங்கு பிரதமர் நூரி அல் மாலிக், உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இராக்கில் ஷியா, சன்னி, குர்து இன மக்கள் வசிக்கின்றனர். 3 சமூகத் தையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று ஜான் கெர்ரி ஏற்கெனவே ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக அனைத்துத் தரப்பு அரசி யல் தலைவர்களுடன் அவர் ஆலோ சனை நடத்தியதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஜான் கெர்ரியின் இராக் பயணம் கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவரது திடீர் பயணம் இராக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT