இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ராணுவ பாது காப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மஹிந்த ராஜபக்சவுக்கு 103 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் ராணுவ முகாமுக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து ராஜபக்சவின் ஆதர வாளரும் எம்.பி.யுமான பந்துல குணவர்த்தன கூறியபோது, தீவிரவாதிகளால் ராஜபக்ச உயிருக்கு ஆபத்து உள்ளது, அவருக்கு தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச கூறியபோது, இலங்கை அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியபோது, அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ராணுவ பாதுகாப்பை விலக்கிக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் ராஜபக்சவின் ராணுவ பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று தெரி வித்தன.