அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட டிரம்பின் தேர்தல் பிரச்சார உத்திகளுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் இதழுக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில் இது பற்றி கூறும்போது, “தேர்தலில் இதெல்லாம் பிரச்சினைக்குரிய விவாதப்பொருள். அரசு இதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்கக் கூடாது.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல விவகாரங்கள் அங்கு பேசப்பட்டு வருகின்றன. யார் என்ன சாப்பிட்டார்கள், யார் என்ன குடித்தார்கள் என்று பல விஷயங்களும் பேசப்படும். நான் எப்படி இவை அனைத்துக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியும்?” என்று பதில் அளித்துள்ளார்.
ஆனால், மோடியின் இந்தப் பதிலுக்கு பல உலகத் தலைவர்கள் இதற்கு வலுவாக எதிர்வினையாற்றியுள்ளனர், பிரிட்டன் பிரதமர் கேமரூன், மோடியின் இந்த ஆலோசனையை அபயாகரமானது என்று வர்ணித்துள்ளார்.
டிரம்ப்பின் முஸ்லிம்கள் பற்றிய கருத்துக்கு பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாக வால் ஸ்ட்ரீட் இதழ் குறிப்பிட்டுள்ளது.