சிரியாவில் இஸ்லாமிய முன்னணி அமைப்பினர் நடத்திய கார் வெடி குண்டுத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் ஹமா மாகாணத்தில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அல் ஹோரா கிராமத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில் 50 பேர் காயமடைந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்அஸாத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய முன்னணி கூட்டமைப் பினர் இத்தாக்குதலுக்குப் பொறுப் பேற்றுள்ளனர்.
சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் இத்தாக் குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்புப்படை வீரர் மற்றும் பொதுமக்கள் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு தாக்குதல்
ஹோம்ஸ் நகரில் வியாழக் கிழமை இரவு நிகழ்ந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. ஆனால், கிளர்ச்சியாளர் கள் மீது அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அரசுக்கு ஐ.நா. கண்டனம்
இதனிடையே வான்வழித்தாக் குதல் மற்றும் தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சிரிய அரசுக்கு ஐ.நா. பொதுச் செயலா ளர் பான் கி- மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.