ஆப்கான் எல்லைப்பகுதில், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள திராஹ் பள்ளதாக்கில் கைபர் இன பழங்குடியினர் வசிக்கின்றனர். இங்கு அல் கொய்தா மற்றும் தனியே இயங்கும் சில தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அங்கு மறைந்திருந்த 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கராச்சியில் உள்ள விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த 36 மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.