உலகம்

பாக்தாதுக்கு உண்மையான அச்சுறுத்தல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்தான்: அமெரிக்க ராணுவ தலைமையகம் கருத்து

செய்திப்பிரிவு

அல்காய்தா ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் (சிரியா, இராக் இஸ்லாமிய ஆட்சி) தீவிரவாதிகள் இராக் தலைநகர் பாக்தாதுக்கு உண்மையான அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என அமெரிக்க ராணுவ தலை மையக அதிகாரி தெரிவித்தார்.

பென்டகன் ஊடகப்பிரிவு செயலர் ஜான் கிர்பி நிருபர்களை சந்தித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இராக்-சிரியா எல்லையை யொட்டி தமக்கென தனி அதிகாரப்பகுதியை நிலை நாட்டிக் கொண்டுள்ள இந்த தீவிரவாதிகள் இராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளுக்குள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். அவர்கள் பாக்தாதுக்கு உண்மை யான அச்சுறுத்தலாக உள்ளனர்.

தங்களுக்கு கிடைத்துள்ள சாதக நிலையை மேலும் வலுவாக்கிக் கொள்ள அவர்கள் முயற்சிப்பது தெரிகிறது. இராக்குக்கும் சிரியாவுக்கும் இடையே உள்ள திறந்த எல்லைப் பகுதி கவலை அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவிலிருந்து பாக்தாத் சென்றுள்ள படை வீரர்களில் 2 சிறப்புப் படைக் குழுக்களும் 90 ஆலோசகர்களும் உள்ளனர்.

இவர்கள் பாக்தாதில் சிறப்பு தாக்குதல் மையத்தை அமைப்பதற்கான பணியில் ஈடுபடுவார்கள். மேலும் 4 சிறப்புப் படை குழு சில தினங்களில் பாக்தாத் சென்றடையும். இந்த படைகள் ஏற்கெனவே பாக்தா தில் தூதரகத்தை சுற்றி பாதுகாப் புக்காக நிறுத்தப்பட்டுள்ள 360 அமெரிக்க படை வீரர்களுடன் இணைவார்கள். இவர்களை சேர்த்தால் இராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 560 ஆகும்.

இந்தபடைக் குழுக்கள் இராக் படைகளின் ஆயத்த நிலை பற்றியும் பாக்தாதில் உள்ள தலைமையகம் பற்றியும் மதிப்பிடுவார்கள். கூடுதல் ஆலோச கர்களின் தேவை பற்றி ஆராய் வார்கள். 3 வாரங்களில் தமது மதிப்பீடுகளை கமாண்ட் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பு வார்கள். இப்போதைய நிலையில் இராக் மீது தினந்தோறும் 35 விமானங்களை பறக்கவிட்டு கள நிலவரத்தை மதிப்பிடுகிறோம் என்றார்.

இதனிடையே, இராக்கில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கைப்பற்ற சன்னி தீவிரவாதிகள் புதன்கிழமை காலை தாக்குதல் நடத்தினர். ஆனால் இதை பாதுகாப்புப் படை முறியடித்தது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியா மல் பிரதமர் நூரி அல் மாலிகி அரசு திணறி வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுமார் 10000 பேர் இராக்குக்குள் புகுந்து விட்டதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT