உக்ரைனுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை ரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. காஸ் விநியோகத்துக்கான பணத்தை தராததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து உக்ரைன் வழியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இதில், உக்ரைனுக்கு விநியோகம் செய்யப்பட்ட எரிவாயுவுக்கான பணத்தை உடனடியாக செலுத்து மாறு ரஷ்யா வலியுறுத்தி வந்தது. இறுதியாக மொத்தம் 195 கோடி அமெரிக்க டாலரை திங்கள்கிழமை காலை 9 மணிக்குள் தர வேண்டும் என்று உக்ரைனுக்கு ரஷ்யா கெடுவிதித்திருந்தது. ஆனால், அத்தொகையை உக்ரைன் தரவில்லை. இதையடுத்து அந்நாட்டுக்கான எரிவாயு விநி யோகத்தை நிறுத்திவைத்துள் ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறுகையில், “இப்போதைக்கு 100 கோடி அமெரிக்க டாலரை தருவதாக வும், மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் உக்ரைன் முன் வந்தது. ஆனால், அதற்கு ரஷ்யா மறுத்துவிட்டது.
ரஷ்ய துணைப் பிரதமர் ஆர்காடி வோர்கோவிச் கூறும் போது, “உக்ரைனுக்கான எரிவாயு விநியோகம் தொடர் பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, ரஷ்ய காஸ் நிறுவனமான காஸ் பிரோமின் முதன்மைச் செயல் அலுவலர் அலெக்ஸி மில்லர், அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே நடை பெறும் சந்திப்பின்போது முடிவு செய்யப்படும்” என்றார்.
காஸ்பிரோம் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் செர்ஜி குப்ரியானோவ் கூறும்போது, “திங்கள்கிழமை முதல் உக்ரை னுக்கான எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ஐரோப்பிய நாடுக ளுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது” என்றார்.