டெட்ரோஸ் அதோனம் 
உலகம்

50-வது நாளில் உக்ரைன் -  ரஷ்யா போர் | அகதிகளான 4.6 மில்லியன் பேர்; அமைதியை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

செய்திப்பிரிவு

ஜெனீவா: உக்ரைன் - ரஷ்யா போர் 50-வது நாளை எட்டியுள்ள நிலையில் இதுவரை 4.6 மில்லியன் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான் ரஷ்யாவின் போர் இன்று 50-வது நாளை எட்டியுள்ளது. தற்போது வரை போர் காரணமாக 4.6 மில்லியன் போர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் அளித்தப் பேட்டியில், "நாளை உக்ரைன் - ரஷ்யா போரின் 50- வது நாள். இதுவரை 4.6 மில்லியன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 119 சுகாதார மையங்கள் தாக்குகதலில் சேதமடைந்துள்ளன. சுகாதார சேவைகள் தொடர்ந்து கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.

மனிதநேய அடிப்படையில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். மருந்துகள், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல மனிதாபிமான வழித்தடங்களை நிறுவ வேண்டும். மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா முன்னெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT