ரஷ்யாவில் போலீஸ் நிலையத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் ஸ்டாவ்ரோபோல் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தை குறி வைத்து 4 தற்கொலைப்படை தீவிர வாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது பாதுகாப்புப் படையினர் அளித்த பதிலடியில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப் பட்டனர்.
மற்ற 3 தீவிரவாதிகளும் வெடித்துச் சிதறினர். இதில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை, தற் கொலைப்படை தாக்குதல் வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டது என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.