உலகம்

பிரபல வணிக இணையதளத்தில் விற்பனைக்கு பாக். பிரதமர் நவாஸ்: ஆரம்ப விலை ரூ.62 லட்சம்

செய்திப்பிரிவு

பிரபல வணிக இணையதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளார். அவரது ஆரம்ப விலை ரூ.62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் தற்போது மருத்துவ பரிசோ தனைக்காக பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் தங்கியுள்ளார். இந் நிலையில் பிரபல இபே இணைய தளத்தில் அவர் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளார்.

பொருள் குறித்த விளக் கத்தில் நவாஸ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப் பட்டுள்ளது. அதில் கூறியிருப்ப தாவது:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்காக உள்ளார். ஆரம்ப விலை ரூ.62 லட்சம். இந்தப் பொருள் தற்போது பயன் பாட்டில் இல்லை. பொருள் தயாரிப்பின்போது ஏற்பட்ட சில குறைபாடுகளால் இது எப்போதுமே வேலை செய்தது இல்லை.

இந்த (நவாஸ் ஷெரீப்) பொருளை வாங்குபவர்களுக்கு ஷாபாஸ் ஷெரீப் (நவாஸின் சகோதரர், பஞ்சாப் மாகாண முதல்வர்) இலவசமாக வழங்கப் படுவார். இந்த ஷாபாஸ் பொருள் நாடகம், சொற்பொழிவு ஆற்றுவ தில் சிறந்தது. ஆனால் அந்தப் பொருளால் வேறு எந்த உபயோகமும் இல்லை.

இரண்டு பொருட்களின் பிறப்பிடம் பாகிஸ்தான். ஆனால் அவற்றை பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில்தான் அதிகமாகக் காண முடியும். தற்போது நவாஸ் பொருள் லண்டனில் உள்ளது.

பொருளை வாங்குபவர்கள் தங்களது சொந்த செலவில் லண்டனில் இருந்து பொருளை எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நவாஸை வாங்குவதற்கு இது வரை 12 பேர் முன்வந்துள்ளனர். நவாஸ் மீதான ஏலம் வரும் 20-ம் தேதி நிறைவடையும் என்றும் அதிக தொகை அளிக்க முன்வரு பவர்களுக்கு பொருள் விற்கப் படும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT