இராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் போரை தீவிரப்படுத்துவதற்கு ஜி-7 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ள அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்ற கூட்டமைப்பாக இயங்கி வருகின்றன. ஜி-7 உச்சி மாநாடு வரும் மே மாதம் ஜப்பா னில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஹிரோஷிமாவில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். 2 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டுக்குப் பிறகு, கூட்டறிக்கை வெளியிடப் பட்டது. அதில், “உலகின் பாதுகாப் புக்கு உடனடி அச்சுறுத்தலாக தீவிர வாதம் உள்ளது. இதனை எதிர் கொள்ள சர்வதேச ஒத்துழைப்பும் ஒருங்கிணைந்த பதில்வினையும் தேவைப்படுகிறது. இராக், சிரியா வில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரை தீவிரப்படுத்தவும் வேகப் படுத்தவும் நாங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அணு ஆயுதம்
2-வது உலகப் போரின்போது அமெரிக்காவின் அணு குண்டு தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப் பட்ட ஹிரோஷிமா நகரில் அமைந் துள்ள, அணு குண்டு நினைவிட மான அமைதிப் பூங்காவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உட்பட ஜி-7 வெளி யுறவு அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு வெளியிட்ட கூட் டறிக்கையில் அணுகுண்டு இல்லாத உலகை உருவாக்குவோம் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் ஸ்திரத்தன் மையை மேம்படுத்தும் வகையில், அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க நாங்கள் மீண்டும் உறுதி யேற்கிறோம். சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் நிலவும் சூழ் நிலை இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகிறது. குறிப்பாக வட கொரியாவின் தொடர் அத்துமீறல் கள் அணு ஆயுதம் இல்லாத உலகை எட்டும் இலக்குக்கு மிகவும் சவாலாக உள்ளன என கூட்டறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெர்ரியின் பயணம்
ஹிரோஷிமாவின் பேரழிவுக்கு அமெரிக்காதான் காரணம். ஆகவே, கெர்ரி அமைதிப் பூங்காவுக்கு சென்றது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அமைதிப்பூங்கா வில் கெர்ரி அஞ்சலி செலுத்தினார்.
“இந்த நினைவிடத்தின் சக்தி குறித்து ஒவ்வொருவரும் பார்க்க வும், உணரவும் வேண்டும் என அந்த அருங்காட்சியகத்தின் வரவேற்பு புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் போர் என்பது கடைசிக்கட்ட தேர்வாக இருக்க வேண்டும், முதல் தெரிவாக இருக்கக்கூடாது” எனவும் அவர் எழுதினார்.
அமெரிக்காவின் எந்தவொரு அதிபரும் ஆட்சியிலிருக்கும்போது இந்த பூங்காவுக்கு வந்ததில்லை. 65 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க தூதர் முதல்முறையாக இங்கு நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.